STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Tamil":

Home -- Tamil? -- Perform a PLAY -- 076 (Three lies in one night)

Previous Piece -- Next Piece

நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாங்ள்

76. ஒரு இரவில் மூன்று பொய்கள்


பேதுரு: “இல்லை, அது உண்மை இல்லை. நான் அதை செய்திருக்கக்கூடாது”.

சில சமயங்களில் பேதுரு இப்படி நடந்துகொள்கிறான். ஆனால் அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

பேதுரு: “எனக்கு இனிமேல் அதுபோல நடக்கவே கூடாது”.

நீ எப்போதாவது இப்படி எண்ணியதுண்டா? பேதுரு மிக உறுதியாக இருந்தான். அவன் இயேசுவுடன் மற்ற சீஷர்களுடன் இணைந்து அந்த இரவில் நடந்து கொண்டிருந்தான். அப்போது இயேசு நின்று அவர்களுடன் பேச ஆரம்பித்தார்.

இயேசு: “இன்று இரவு நீங்கள் என்னை தனியே விட்டுவிட்டு ஓடிவிடுவீர்கள், என்னை நிந்திப்பீர்கள்”.

பேதுரு: “ஒருபோதும் அப்படி நடக்காது. மற்றவர்கள் உம்மை விட்டு சென்றாலும் நான் செல்ல மாட்டேன்”.

இயேசு நமது இருதயங்களை அறிகிறார்.

இயேசு: “பேதுருவே! நான் உன்னை அறிவேன். சேவல் இருமுறை கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்று முறை மறுதலிப்பாய்”.

பேதுரு: “ஆண்டவராகிய இயேசுவே, நான் ஒருபோதும் அப்படிச் செய்ய மாட்டேன். நான் உம்மை மறுதலிக்க மாட்டேன். உமக்காக நான் சாகவும் ஆயத்தம்”.

மற்ற சீஷர்களும் இதைப் போன்றே சொன்னார்கள். ஆனால் இயேசு அனைத்தையும் அறிகிறவர். பின்பு இயேசு கட்டப்பட்டவராக, எதிரிகளால் சிறைபிடிக்கப்பட்டார். அவருடைய சீஷர்கள் அனைவரும் ஓடிவிட்டார்கள். பேதுருவும் பயந்தான். ஆனால் சற்று தூரத்தில் இயேசுவைப் பின் தொடர்ந்தான். அவர்கள் என்ன செய்யப் போகிறார்களோ என்பதைக் காண விரும்பினான்.

பேதுரு: “அவர்கள் எங்கே கொண்டு செல்கிறார்கள்? பிரதான ஆசாரியனின் அரண்மனைக்கா? என்னைப் பற்றி என்ன? நான் யாருடைய கண்ணிலும் படாமல் கவனமாக இருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் என்னை சிறைபிடிக்க மாட்டார்கள்”.

பேதுரு அவனுடைய ஆண்டவரின் எதிரிகள் பக்கத்தில் போய் அமர்ந்தான். அவர்களுடன் சேர்ந்து முற்றத்தில் குளிர் காய்ந்து கொண்டிருந்தான். அது சரியான இடம் தானா? இயேசுவை வெறுப்பவர்கள் மத்தியில் ஒரு இயேசுவின் நண்பனா?

வேலைக்காரி 1: “உன்னை எனக்கு நன்றாகத் தெரியும். நீ இயேசுவுடன் இருந்தவன் தானே?”

பேதுரு: “நானா? நீ என்ன பேசுகிறாய் என்றே எனக்குத் தெரியவில்லை”.

வேலைக்காரி 2: “அங்கே பார். அவன் இயேசுவுடன் இருந்தவன்”.

பேதுரு: “அது உண்மையில்லை. அந்த மனிதனை யார் என்றே எனக்குத் தெரியாது”.

வேலைக்காரன்: “நீ நிச்சயம் இயேசுவுடன் இருந்தவன் தான். உனது பேச்சே அதைச் சொல்கிறது”.

பேதுரு: “நிறுத்துங்கள் உங்கள் பேச்சை. எனக்கு இயேசுவைத் தெரியாது, தெரியாது”. (சேவல் கூவும் சத்தம்)

பேதுரு அதிர்ச்சியுற்றவனாய் திரும்பிப்பார்த்தான். அச்சமயத்தில் இயேசு அவனைப் பார்த்தார். பேதுரு மிகவும் துக்கப்பட்டான். தனது இருதயத்தில் மிகவும் வேதனைப்பட்டான். சில மணி நேரங்களுக்கு முன்பு இயேசு சொன்னதை பேதுரு நினைவு கூர்ந்தான்.

பேதுரு இயேசுவை மறுதலித்தான் அதற்காக அவன் மிகவும் வருத்தப்பட்டான். அவன் வெளியே சென்று, மனம் கசந்து அழுதான். இயேசு அவனை இப்போதும் நேசிக்கிறார் என்பதை அவன் அறிந்திருந்தானா?


மக்கள்: உரையாளர், இயேசு, பேதுரு, இரண்டு வேலைக்காரிகள், வேலைக்காரன்.

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on July 30, 2018, at 09:50 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)