Home -- Tamil? -- Perform a PLAY -- 077 (The tomb is empty )
77. கல்லறை காலியாக உள்ளது
இயேசுவின் சரீரத்தை சிலுவையில் இருந்து புதிய கல்லறையில் அவருடைய நண்பர்கள் வைத்தார்கள். பின்பு பெரிய கல்லைப் புரட்டி வைத்து, அந்த கல்லறையின் வாசலை அடைத்தார்கள்.
(பின்னணி இசை)
சிறுமி: இயேசு சிலுவையில் மரித்தார். இறைவன் அவரை தண்டித்தார். நாம் பாவிகளாய் இருந்தோம். அவர் எனக்காகவும், உனக்காகவும் மரித்தார்.
சீஷர்கள் மிகவும் துக்கத்துடன் ஒரு வீட்டில் இருந்தார்கள். ஏன் இயேசு மரித்தார் என்பதை ஒருவரும் புரிந்துகொள்ள முடியவில்லை. பேதுரு மிகவும் பாதிக்கப்பட்டான். அவன் மூன்று முறை இயேசுவைத் தெரியாது என்று மறுதலித்ததற்காக மிகவும் மனம் வருந்தினான். அவனுடைய இச்செயலை அவனாலேயே மன்னிக்க முடியவில்லை. இப்போது எல்லாம் முடிந்துவிட்டது. இயேசு மரித்துவிட்டார்.
(பின்னணி இசை)
சிறுவன்: இயேசு சிலுவையில் மரித்தார். அவர் நமக்காக தமது இரத்தத்தை சிந்தினார். நம்முடைய பாவங்களை நாம் அவரிடம் கொண்டு வரும்போது, அவர் நம்மை மன்னிக்கிறார். அவர் என்னையும், உன்னையும் மன்னிக்கிறார்.
திடீரென்று நம்பிக்கையின் கதவு திறந்தது.
மரியாள்: “அவர் உயிருடன் இருக்கிறார்! இயேசு உயிருடன் இருக்கிறார்! அவர் கல்லறையில் இல்லை”.
மற்ற மரியாள்: “இந்த நல்ல செய்தியை ஒரு தூதன் எங்களிடம் கூறினான். பேதுருவினிடத்தில் குறிப்பாக இதைச் சொல்லுங்கள் என்றான். இயேசு உயிருடன் இருக்கிறார்”.
பேதுரு: “அவர் உயிருடன் இருக்கிறாரா?”
பேதுருவால் தன்னை அடக்க முடியவில்லை. யோவானும், பேதுருவும் கல்லறையை நோக்கி வேகமாக ஓடினார்கள். உள்ளே பார்த்தார்கள். இயேசுவின் சரீரம் அங்கில்லை. அவர்கள் அதைக்கண்டு, இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார் என்பதை விசுவாசித்தார்கள். அவர்கள் உடனடியாக ஓடிப்போய், மற்றவர்களுக்கும் இதைச் சொல்லுங்கள் என்றார்.
(பின்னணி இசை)
சிறுவன்&சிறுமி: இயேசுவின் சரீரத்தை சுற்றியிருந்த துணி அங்கிருக்கிறது. ஆனால் அவர் மரித்தவராக அங்கு இல்லை.
மூன்றாம் நாளில் அவர் உயிருடன் எழுந்தார். அல்லேலூயா!
எனக்காகவும் உனக்காகவும் அவர் எழுந்தார். அல்லேலூயா!
சீஷர்களுக்காகவும், பேதுருவிற்காகவும், தோற்றுப்போனவர்களுக்கும், தவறான காரியங்களை செய்கிறவர்களுக்காகவும் இயேசு மரித்தார். நமது இடத்தில் அவர் மரித்தார். உயிருடன் எழுந்தார்.
மக்கள்: உரையாளர், மரியாள், மற்ற மரியாள், பேதுரு, சிறுவன், சிறுமி.
© Copyright: CEF Germany