STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Tamil":

Home -- Tamil -- Perform a PLAY -- 007 (On the winner’s side)

Previous Piece -- Next Piece

நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாங்ள்

7. வெற்றியாளரின் பக்கம்


இஸ்ரவேலருக்கு எதிராக யுத்தம் செய்ய பெலிஸ்தியர்கள் வந்தார்கள். தாவீதின் மூத்த சகோதரர்கள் முன்னணியில் நின்றார்கள். தாவீது அவர்களுக்கு உணவு எடுத்துக்கொண்டு அவர்களை நலம் விசாரிக்கப் போனான். அவன் யுத்த களத்திற்கு வந்தபோது, உண்மையான இராட்சதனைக் கண்டான். அவன் ஏறக்குறைய பத்து அடி உயரம் இருந்தான். அவன் பெயர் கோலியாத். அவன் இஸ்ரவேலரை திட்டி, அவர்களை சபித்தான். அனைத்து போர் வீரர்களும் அவனுக்குப் பயந்தார்கள். சவுல் ராஜாவும் பயந்தார்.

இறைவன் பலம் உள்ளவர் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்களா?

கோலியாத்: “செவிட்டு இஸ்ரவேலரே! பயந்தாங்கொள்ளிகளே! ஹா ஹா ஹா! நான் உங்களை பறவைக்கு உணவாக்குவேன். உங்கள் இறைவன் உங்களுக்கு உதவ முடியாது. நான் அவரை விட பலமுள்ளவன்”.

தாவீது: “நீங்கள் இதைக் கேட்டீர்களா? அவன் இறைவனை கேலி செய்கிறான். அவன் தொடர்ந்து இப்படிச் செய்ய அனுமதிக்கப் போகிறீர்களா?”

தூஷித்துப் பேசிய பெலிஸ்தியன் நிமித்தம் தாவீது மிகவும் வேதனைப்பட்டான். இஸ்ரவேலரைக் கேலி செய்வது என்பது ஒரு காரியம். இறைவனைக் கேலி செய்வது என்பது வேறொரு காரியம். அவன் மிக மோசமாகப் பேசினான். தாவீது உடனடியாக சவுல் அரசனிடம் தாவீது சென்று “நான் இராட்சதனாகிய கோலியாத்துடன் யுத்தம் பண்ணுவேன்” என்றான்.

தாவீது மிக தீவிரமாக செயல்பட்டான். ஆடு மேய்ப்பனின் கோல் மற்றும் கவண் மட்டும் எடுத்துக் கொண்டு, கோலியாத்தை நோக்கி நடந்தான்.

இறைவன் பலமுள்ளவர் – அவனுக்கு இது தைரியத்தை தந்தது.

ஒரு ஆடு மேய்க்கும் சிறுவனைக் கண்ட போது, அநேக போர்வீரர்களால், தங்கள் கண்கள் காண்பதை நம்ப இயலவில்லை. அவர்கள் பெருமூச்சு விட்டார்கள்.

கோலியாத் நெருங்கி அருகில் வந்து கொண்டிருந்தான்.

கோலியாத்: “ஒரு தடியுடன் நீ என்னிடம் வருவதற்கு நான் என்ன நாயா? உனது இறைவன் உன்னை காப்பாற்றுவார் என்று எண்ணுகிறாயா? ஹா ஹா ஹா! நான் அவரை விட பலமுள்ளவன். நான் உன்னை கொல்லப் போகிறேன்”.

தாவீது: “நீ என்னுடன் பட்டயம், கேடகத்துடன் வருகிறாய். ஆனால் நீ நிந்தித்த சர்வ வல்ல இறைவனின் நாமத்தினால் நான் உன்னிடம் வருகிறேன். அவர் உன்னை விடப் பலமுள்ளவர். நான் உன்னை தோற்கடிப்பேன். இஸ்ரவேல் உயிருள்ள ஆண்டவருக்கு சேவை செய்கின்றது என்பதை முழு உலகமும் காணும்”.

தாவீது தனது கவணை எடுத்து சுழற்றினான் ... (கவண் எறியும் சத்தம்)

கோலியாத்: “ஆ …” (அலறல் சத்தம்)

தாவீதின் கவணில் இருந்த கல் இராட்சதனின் நெற்றியில் பதிந்தது. அவன் கீழே விழுந்தான், இறந்தான்.

இறைவனை சபித்த கோலியாத்திற்கு என்ன நன்மை கிடைத்தது? முடிவில் யார் பலமுள்ளவர்? இறைவன் பலமுள்ளவர்.


மக்கள்: உரையாளர், கோலியாத், தாவீது.

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on July 25, 2018, at 02:35 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)