STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Tamil? -- Perform a PLAY -- 157 (Esther risks her life 2) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malagasy -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Sindhi -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- TAMIL -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாடகங்கள்
157. எஸ்தர் தனது உயிரை விடவும் துணிந்தாள் 2ஆமான் ராஜாவின் தயையைப் பெற விரும்பியவன் மட்டுமல்ல, அவன் பெருமைமிக்கவனாக இருந்தான். அகாஸ்வேரு ராஜா பெர்சிய பேரரசின் இரண்டாவது வல்லமையுள்ள மனிதனாக ஆமானை நியமித்தார். ஒவ்வொருவரும் அவனை பணிந்துகொண்டார்கள். அவனை கனப்படுத்தினார்கள். ஆனால் எஸ்தர் ராணியின் வளர்ப்புத்தந்தை மொர்தெகாய் அப்படிச் செய்யவில்லை. அவன் ஒருபோதும் ஆமானை பணிந்துகொள்ளவில்லை. ஆமான் கடுங்கோபம் அடைந்தான். ஆமான்: “நீ கட்டளைக்கு கீழ்ப்படிய மறுக்கிறாய்? நீ ஏன் என்னை பணிந்துகொள்ளவில்லை?” மொர்தெகாய்: “நான் யூதனாக இருக்கிறேன். நான் இறைவனை மட்டுமே பணிந்துகொள்வேன்”. ஆமான்: “நீ இதற்காக வருத்தப்பட போகிறாய்!”. ஆமான் மிகவும் எரிச்சல் அடைந்தான். தனது இருதயத்தில் இரகசிய திட்டத்தை தீட்ட ஆரம்பித்தான். ஆமான்: “நான் அவனை கொல்லப் போகிறேன். அவனை மட்டுமல்ல. பெர்சியாவின் 127 மாகாணங்களில் வாழும் ஒவ்வொரு யூதனையும் கொல்லப் போகிறேன். நான் அவர்களை நிர்மூலமாக்கப் போகிறேன்”. ஆமான் யூதர்களைக் குறித்து தவறான காரியங்களை ராஜாவிடம் சொன்னான். அவன் பெரிய பணத்தொகையை ராஜாவின் கஜானாவிற்கு கொடுத்து, ராஜாவை சம்மதிக்க வைத்தான். இப்போது அவன் நினைத்ததை செய்யும் நிலை ஏற்பட்டது. ஆமான் வேகமான குதிரைகளில் செல்லும் செய்தியாளர்கள் மூலம் முத்திரையிடப்பட்ட கடிதங்களை ஒவ்வொரு பட்டணத்திற்கும் அனுப்பினான். அவனுடைய பயங்கரமான கட்டளை எல்லா இடங்களிலும் அறிவிக்கப்பட்டது. செய்தியாளர்: “இராஜாவின் கட்டளைப்படி டிசம்பர் 13-ம் தேதி ஒவ்வொரு யூத ஆணும், பெண்ணும் குழந்தைகளும் கொல்லப்பட வேண்டும். ஒருவனையும் உயிருடன் விட வேண்டாம். அவர்களை முற்றிலும் அழித்து, அவர்கள் உடைமைகளை எடுத்துக்கொள்ளுங்கள்!” இந்தக் கட்டளை மிகுந்த பயத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது. யூதர்கள் துக்க உடைகளை உடுத்திக்கொண்டார்கள். அவர்கள் கதறி அழுதார்கள். இறைவனை நோக்கி கூப்பிட்டார்கள். மொர்தெகாய் அரண்மனைக்கு ஓர் அவசர வேண்டுதல் அனுப்பினான். ஒரே ஒரு நபர் தான் உதவ முடியும். அவனுடைய வளர்ப்பு மகள், எஸ்தர் ராணி. மொர்தெகாய்: “எஸ்தர்! நீ ராஜாவினிடத்தில் செல்ல வேண்டும்! நாம் பிழைக்கும்படி அவரிடம் மன்றாட வேண்டும்”. எஸ்தர்: “என்னால் அதைச் செய்ய இயலாது. ராஜா கட்டளை பிறப்பிக்காமல் ஒருவரும் அவரை பார்க்க இயலாது. மீறி நான் சென்றால், நான் செத்துவிடுவேன்”. மொர்தெகாய்: “அமைதியாய் இராதே! நாம் பாதுகாக்கும்படி, ஒருவேளை உனக்கு இந்த ராணிப்பட்டம் கிடைத்திருக்கலாம்!” எஸ்தர்: “எனக்காக விண்ணப்பம் பண்ணுங்கள். நான் ராஜாவிடம் போகிறேன். நான் செத்தாலும் சாகிறேன்!” எஸ்தரைப் போல, இயேசுவும் தனது உயிரை விட ஆயத்தமாயிருந்தார். நாம் நிலைவாழ்வைப் பெற்று, இரட்சிக்கும்படி, அவர் மரிக்க ஆயத்தமாயிருந்தார். எஸ்தர் தனது அழகுமிக்க ஆடைகளை அணிந்தாள். அவள் இதயம் படபடத்தது. அரியணையை நோக்கிச் சென்றாள். அவள் வருவதை ராஜா கண்டான். அவன் அவளை வரவேற்றானா? அல்லது … அடுத்த நாடகத்தில் நான் உங்களுக்கு சொல்வேன். மக்கள்: உரையாளர், ஆமான், மொர்தெகாய், எஸ்தர், செய்தியாளர். © Copyright: CEF Germany |