STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Tamil -- Perform a PLAY -- 047 (Arsonist 6) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- TAMIL -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாடகங்கள்
47. தீ கொழுத்துபவன் 6ஒரு ஞாயிறு மாலை நேரத்தில் மலைகளின் பின்பு சூரியன் மறைவதை டிபாம் கவனித்துக் கொண்டிருந்தாள். அவள் இறைவனின் பிள்ளையாக இருந்ததால் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தாள். அவளது அப்பா ஒரிஸ்டில் வேதாகமத்தை கிழித்து எறிந்துவிட்டார். ஆனால் ஆண்டவராகிய இயேசுவை அவளது இருதயத்தில் இருந்து எடுக்க முடியவில்லை. டிபாம் அப்பா மீது கோபப்படவில்லை. அப்பாவை அவள் நேசித்தாள். டிபாம்: “அப்பா. விக்டர் ஒவ்வொரு ஞாயிறும் நமது கிராமத்திற்கு பிரசங்கிக்க வருகிறார்”. ஒரிஸ்டில்: “அவன் அப்படிச் செய்யாமலிருப்பது நல்லது”. ஒரிஸ்டில் கோபத்துடன் வந்து, விக்டர் பேசிய வார்த்தைகளை கேட்டுக் கொண்டிருந்தான். விக்டர்: “இயேசு என் வாழ்வை மாற்றினார். நான் ஆவிகளைக் குறித்த பயத்துடன் வாழ்ந்தேன். அவைகளுக்கு சேவை செய்தேன். ஆனால் இறைவனின் அன்பை குறித்து கேள்விப்பட்ட போது, நான் அவரை நம்பினேன். இப்போது நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். இயேசு எப்போதும் என்னுடன் இருக்கிறார். நான் ஒருபோதும் தனியாக இல்லை”. ஒரிஸ்டில் ஆவிகளுக்காக கட்டிய சிறிய வீட்டிற்குள் சென்றான். ஒரிஸ்டில்: “ஆவிகளே, உங்கள் பலத்தை எனக்கு காண்பியுங்கள். இந்த சபை கட்டிடத்தின் மீது நெருப்பு வந்து விழுந்து, எரியச் செய்யட்டும்”. அந்த நடு இரவில் எரியும் நெருப்புக் கட்டையுடன் சபையை நோக்கி சென்றான். அவன் சிரித்துக்கொண்டே நெருப்பை மேலே போடப் பார்த்தான். திடீரென ஒரு கை அவனைப் பிடித்து இழுத்தது. மந்திரவாதி நிலை குலைந்தான். ஒரிஸ்டில்: “விக்டர், நீ எங்கிருந்து வந்தாய்?” விக்டர்: “நான் உன்னிடம் பேசும்படி இயேசு என்னை அனுப்பினார். அவர் உன்னை நேசிக்கிறார்”. ஒரிஸ்டில்: “அவர் இன்னும் என்னை நேசிக்கிறாரா? நான் ஆவிகளுக்கு சேவை செய்கிறேன். பொய் சொல்கிறேன். உன்னை கொல்ல முயற்சித்திருக்கிறேன். சபையை எரிக்க வந்திருக்கிறேன். டிபாமின் வேதாகமத்தை கிழித்திருக்கிறேன். அவர் இன்னும் என்னை நேசிக்கிறாரா?” விக்டர்: “உன்னுடைய ஒவ்வொரு பாவத்திற்காகவும் அவர் சிலுவையில் மரித்தார். அவர் உன்னை மன்னிப்பார்”. ஒரிஸ்டில்: “நான் செய்த செயல்களுக்காக மனம் வருந்துகிறேன். எனக்கு சமாதானம் வேண்டும். நான் இறைவனின் பிள்ளையாக மாற விரும்புகிறேன்”. மந்திரவாதி மாற்றம் அடைந்தான். தனது எல்லா மந்திரப் பொருட்களையும் எரித்தான். ஒரு புதிய வாழ்வை ஆரம்பித்தான். அவன் முகம் சந்தோஷத்தினால் ஒளிர்வதை அனைவரும் கண்டார்கள். எல்லோரையும் விட அதிக மகிழ்ச்சியடைந்தவள் டிபாம். இயேசுவே வெற்றியாளர். அவர் ஹெய்தியிலும், நம்முடனும் இருக்கிறார். தன்னிடம் வரும் அனைவரையும் அவர் ஏற்றுக்கொள்கிறார். அவர்கள் இறைவனின் பிள்ளைகளாக மாறுகிறார்கள். “அவருடைய நாமத்தின் மேல் விசுவாசம் உள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் இறைவனின் பிள்ளைகளாகும்படி அதிகாரம் கொடுத்தார்”. (யோவான் 1:12) இது வேதாகமம் கூறும் வார்த்தை. மக்கள்: உரையாளர், டிபாம், ஒரிஸ்டில், விக்டர். © Copyright: CEF Germany |