STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Tamil":

Home -- Tamil -- Perform a PLAY -- 002 (The storm rages)

Previous Piece -- Next Piece

நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாங்ள்

2. பெரும் புயல் சீற்றம்


திடீரென்று ஒரு கடும்புயல் வீசியது. (சத்தங்கள்: புயல், இடி, மழை)

அலைகள் படகு மூழ்கத்தக்கதாக எழும்பின. அந்த புயல் கொடிதாய் இருந்தது. அனைவரும் பயந்தார்கள். ஏனெனில் கலிலேயா கடலின் புயல் எவ்வளவு ஆபத்தானது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். மறுபடியும் அலை படகின் மீது மோதியது. புயல் கடுமையாய் இருந்தது. கடல் கொந்தளித்தது. அவர்கள் காப்பாற்றப்பட்டார்களா?

அந்த படகில் இருந்த சிலர் மீனவர்கள். அவர்கள் இப்படிப்பட்ட கால சூழ்நிலையை சந்தித்த அனுபவம் கொண்டவர்கள். ஆனால் இது அவர்கள் சந்தித்திராத கடும்புயலாக காணப்பட்டது.

சீஷர்கள்: “உதவி, உதவி, நாங்கள் மூழ்கிப்போகிறோம்”.

இவர்கள் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த சமயம் இயேசு படகின் அடித்தட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நிலைமை மிகவும் மோசமானவுடன் அவர்கள் இயேசுவிடம் ஓடி வந்து முறையிட்டார்கள்.

சீஷர்கள்: “இயேசுவே, நாங்கள் மூழ்குவதைக் குறித்து உமக்குக் கவலை இல்லையா? நீர் எங்களுக்கு உதவி செய்யும். நாங்கள் மூழ்குகிறோம்”.

பயம் மற்றும் கவலையின் அலைகள் உன் வாழ்க்கைப் படகில் மோதும் போது நீ யாரை அழைப்பாய்? இயேசு அனைத்திற்கும் ஆண்டவர். அவர் எழுந்து நின்றார். காற்றுடன் பேசினார்.

இயேசு: “இரையாதே! அமைதலாயிரு!”

உடனடியாக காற்று வீசுவது நின்றது. அமைதி உண்டாகியது. அங்கு புயல் ஏற்பட்ட அறிகுறியே இல்லாதிருந்தது.

சீஷர்கள் இந்த அற்புதத்தைக் கண்டு வியப்படைந்தார்கள்.

சீஷர்கள்: “யார் இந்த இயேசு? காற்றும், கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே!”

இயேசுவே ஆண்டவர்: வியாதிகள், தீய ஆவிகள் அனைத்தின் மேலும் ஆளுகை செய்கிறவர். அவர் மரணத்தின் மீதும் ஆளுகை செய்கிற ஆண்டவர்.

அவரைப் போல ஒருவரும் இல்லை. அவர் செய்வதைப் போல் ஒருவனாலும் செய்ய இயலாது. அந்த படகு மற்றும் இயேசுவுடன் சீஷர்களும் மூழ்கி விடுவார்கள் என்று நினைத்தார்கள்.

இயேசு: “உங்கள் விசுவாசம் எங்கே? நீங்கள் ஏன் பயப்பட்டீர்கள்?”

இயேசு கேட்ட கேள்வியை அவர்கள் தங்களிடமே மீண்டும் கேட்க வேண்டும்.

உனது வாழ்வின் அலைகள் மீதான ஆண்டவர் இயேசு.

உனது தேவை, கவலை, பள்ளியில் உள்ள பிரச்சினைகள், வியாதிகள் என்ற அலைகளைக் குறித்து அவரிடம் பேசு.

இயேசுவே ஆண்டவர். எனவே பயப்பட வேண்டாம். அதற்குப் பதிலாக அவரை நம்புங்கள்.


மக்கள்: உரையாளர், சீஷர்கள், இயேசு.

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on July 30, 2018, at 09:25 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)