STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Tamil":

Home -- Tamil? -- Perform a PLAY -- 100 (Join us)

Previous Piece -- Next Piece

நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாங்ள்

100. எங்களுடன் இணைந்து படியுங்கள்


மிரியாம் விடுமுறை நாளில் குழு நடனப் பயிற்சி வகுப்பிற்கு செல்கிறாள். தீனா குதிரை சவாரி பயிற்சிக்கு செல்கிறாள். மத்தேயு வெற்றிகரமாக தனது கராத்தே வகுப்பை முடித்துவிட்டான்.

நான் உங்களுக்கு ஒரு அருமையான வேத பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். இது மிகவும் நல்லது. எந்த செலவும் கிடையாது. உங்களுக்கு வினா-விடை போட்டி, இரகசியங்களை கண்டறியும் போட்டி என்று பல்வேறு பயிற்சிகள் இருக்கும். அதே சமயத்தில் நீ இறைவனைக் குறித்தும், உன்னைக் குறித்தும் கற்றுக்கொள்வாய்.

மிஸி: “நான் பங்குபெற விரும்புகிறேன். நான் என்ன செய்ய வேண்டும்?”

எனக்கு எழுதுங்கள். நான் உங்களுக்கு அனுப்புவேன். ஜோஸ் இந்த வேதபாடத்திட்டத்தில் இணைந்துள்ளான். ஐந்து பகுதிகளுக்கும் பதிலளித்துவிட்டான்.

ஜோஸ்: “அது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது”.

மிஸி: “நான் இதில் உடனடியாக சேராவிட்டால் நிறைய காரியத்தை இழந்துவிடுவேன் என்று நினைக்கிறேன்”.

நானும் அப்படியே நினைக்கிறேன். இன்று வேதபாடத்திட்டத்தில் நீ இணைந்துகொள்வது நல்லது. நீ மட்டுமல்ல, உனது நண்பர்களும் விரும்பினால் இணைந்து கொள்ளலாம். உங்களுக்கான வேத பாடங்களை நீங்கள் மொத்தமாக பெற்றுக்கொள்ளலாம்.

12 வயது மட்டுமே நிரம்பிய ஒருவர் அதிகமாக வேதத்தை அறிந்து வைத்திருந்தார். அவர் யார் என்பது உனக்குத் தெரியுமா? அவருடைய ஞானத்தைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள்.

இது எருசலேமின் தேவாலயத்தில் 2000 ஆண்டுகள் முன்பு நிகழ்ந்தது. அவர் யார், நீ அவரின் பெயரை யூகித்திருப்பாய்.

அவர் இறைவனின் குமாரனாகிய இயேசு.

இந்த வேதபாடத்தின் மூலம் நீ அவரைக் குறித்தும், அவருடைய வார்த்தையைக் குறித்தும் இன்னும் சிறப்பாக அறிய முடியும். இந்த வேதபாடத்திட்டத்தில் பங்குபெற்று, நிறை காரியங்களை கற்றுக்கொள். வேதத்தை படிப்பவர்கள் அதிகம் அறிந்து கொள்கிறார்கள்.

மிஸி: “நிச்சயம், நான் இதில் இணைகிறேன்”.

நீயும், இந்த வேத பாடத்திட்டத்தில் இணைகிறாயா? உனது பதிலை எதிர்பார்க்கிறோம்.

இந்த வேதபாடத்தில் இன்னும் அநேக பிள்ளைகள் இணைய விரும்பினால், நாங்கள் உங்களுக்கு இந்தப் பாடத்தை வழங்க ஆயத்தமாயிருக்கிறோம்.


மக்கள்: உரையாளர், மிஸி, ஜோஸ்.

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on July 30, 2018, at 10:07 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)