Home -- Tamil -- Perform a PLAY -- 057 (Taken hostage in Egypt 5)
57. எகிப்தில் பிணையாக நிறுத்தப்படுதல் 5
(குதிரை காலடிச் சத்தம்)
அரசனின் இரதத்தில் எகிப்து முழுவதும் யோசேப்பு பயணம் செய்தான். ஒவ்வொருவனும் அவனைப் பணிந்து கொண்டார்கள். பார்வோன் தனது முத்திரை மோதிரத்தை அவனுக்குத் தந்து, அதிகாரம் கொடுத்திருந்தான். யோசேப்பு வயல் நிலங்கள் மற்றும் தோட்டங்கள் வழியாகக் கடந்து சென்றான். இறைவன் சொன்னதைப் போல நடந்தது. மிகப்பெரிய அறுவடை கிடைத்தது.
(பின்ணனி சத்தம்: கதிர் அடித்தல்)
யோசேப்பு அநேக தானியக் கிடங்குகளைக் கட்டினான். பெரிய அளவில் தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டன. யோசேப்பின் திட்டங்கள் நேர்த்தியாய் இருந்தன. அவன் சொன்னது போல ஏழு ஆண்டுகள் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் பசியுடன் பார்வோனை நோக்கிச் சென்றார்கள்.
மக்கள்: “ நான் பசியுடன் இருக்கிறேன்; நாங்கள் பட்டினியாய் இருக்கிறோம். எங்கள் குழந்தைகள் பசியாற, ஏதாவது தாருங்கள்”.
பார்வோன்: “உங்களுக்கு உதவ யோசேப்பு இருக்கிறான். அவன் சொல்வதைச் செய்யுங்கள்”.
எல்லா இடங்களில் இருந்தும் மக்கள் வந்தார்கள். வேறு நாடுகளில் இருந்தும் வந்தார்கள். அப்போது பத்து மனிதர்கள் அவனை வணங்கினார்கள். யோசேப்பு உடனடியாக அவர்களை அறிந்து கொண்டான். அவர்கள் யோசேப்பின் சகோதரர்கள். யோசேப்பு தனது சொப்பனத்தையும் அவர்கள் தன்னை வெறுத்து அடிமையாக விற்றுப் போட்டதையும் நினைத்துப் பார்த்தான். ஆனால் அவர்கள் அவனை அறிந்துக் கொள்ளவில்லை.
யோசேப்பு அவர்களிடம் கடினமாகப் பேசினான்.
யோசேப்பு: “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?”
சகோதரர்: “நாங்கள் கானான் தேசத்தில் இருந்து, தானியங்கள் வாங்க வந்திருக்கிறோம்”.
யோசேப்பு: “நீங்கள் பொய் சொல்கிறீர்கள். நீங்கள் ஒற்றர்கள்!”
சகோதரர்: “இல்லை. நாங்கள் பன்னிரண்டு சகோதரர்கள். ஒருவன் வீட்டில் இருக்கிறான். மற்றொருவன் இறந்துவிட்டான்”.
யோசேப்பு: “நான் இதை நம்பமாட்டேன். நான் இறைவனை நேசிக்கிறேன். எனவே உங்களுக்கு தானியம் தருகிறேன். நீங்கள் உங்கள் இளைய சகோதரனை அழைத்து வர வேண்டும். அதுவரை உங்களில் ஒருவன் இங்கு இருக்க வேண்டும்”.
ஏன் யோசேப்பு இப்படி நடந்துகொண்டான்? அவன் பழிவாங்க நினைத்தானா? இல்லை, அவன் தனது சகோதரர்களை சோதித்துப் பார்க்க விரும்பினான். அவர்களில் மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் காண விரும்பினான். யோசேப்பிற்கு தங்கள் மொழி தெரியாது என்று எண்ணி, அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொண்டார்கள்.
சகோதரர்கள்: “நாம் யோசேப்பிற்கு செய்த கொடுமைக்கான தண்டனை தான் இது”.
யோசேப்பு இதைக் கேட்ட போது அழுதான். ஆனாலும் தான் யார் என்பதை அவன் இன்னும் வெளிப்படுத்தவில்லை. தானியங்களுடன் அவர்கள் வீட்டிற்குச் சென்றார்கள். சிமியோன் எகிப்தில் இருந்தான்.
இதைக் குறித்த கேள்விப்பட்ட போது தகப்பனாகிய யாக்கோபு மிகவும் வேதனைப்பட்டான். தானியங்கள் தீர்ந்து போனபின்பு, பென்யமீனைக் கூட்டிக்கொண்டு மறுபடியும் எகிப்திற்குப் போனார்கள். இரண்டாம் முறை எகிப்திற்குப் போன போது, சகோதரர்கள் அனைவரும் பயத்துடன் இருந்தார்கள். பிறகு என்ன? அடுத்த நாடகத்தில் காண்போம்.
மக்கள்: உரையாளர், மக்கள், பார்வோன், யோசேப்பு, சகோதரர்.
© Copyright: CEF Germany