STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Tamil -- Perform a PLAY -- 006 (9 to 1 ) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- Bengali -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- TAMIL -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
நாடகங்கள் -- மற்ற சிறுவர்களுக்கு செய்து காட்டுங்கள்!
சிறுவர்கள் நடிப்பதற்கான நாடகங்கள்
6. 9 மற்றும் 1. நன்றியுணர்வு நல்லதுஆண்டவராகிய இயேசுவுடன் சீஷர்கள் நீண்ட தூரம் பயணம் செய்தார்கள். நீங்கள் வேதாமத்தை வாசிக்கும் போது, அவர்களுடன் இணைந்து இஸ்ரவேலின் எல்லா பகுதிகளுக்கும் நீங்கள் செல்ல முடியும். சீஷர்கள் பாக்கியவான்கள். வியாதியஸ்தரை இயேசு சுகமாக்கிய போதும், பரலோகப் பிதாவிடம் அவர் விண்ணப்பம் செய்த போதும், ஒரு வார்த்தையினால் புயலை அமைதிப்படுத்தியபோதும், அவர்கள் இயேசுவுடன் இருந்தார்கள். லூக்கா நற்செய்தி நூலில் இயேசு தூசி நிறைந்த சாலையில் சீஷர்களுடன் நடந்தார் என்று பார்க்கிறோம். அவர்கள் சமாரியாவிற்கும், கலிலேயாவிற்கும் இடையில் உள்ள சிறிய ஊருக்கு வந்தார்கள். தொழுநோயாளிகள்: “இயேசுவே, ஆண்டவரே, எங்களுக்கு உதவும்!” அந்த பத்து மனிதர்களும் இயேசுவைக் கண்டபோது இப்படி அழைத்தார்கள். சீஷர்கள் நெருங்கி வந்தபோது, இந்த பத்துப் பேரும் தொழுநோயாளிகளாக இருப்பதைக் கண்டார்கள். தொழுநோய் என்பது மிக மோசமான வியாதி. அது தோலில் ஒரு தேமலைப் போன்று ஆரம்பித்து, சரீரத்தை முழுவதும் தின்று அழுகச் செய்கின்றது. தொழுநோயாளிகள் சமூகத்தை விட்டு விலக்கி வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் குகைகளில் அல்லது திறந்த வெளிகளில் வாழ்ந்தார்கள். அவர்கள் யாரையும் தொட அனுமதிக்கப்படவில்லை. எல்லோரும் அவர்களை புறக்கணித்தார்கள். ஆனால் இயேசு அப்படிச் செய்யவில்லை. தொழுநோயாளிகள்: “இயேசுவே, எங்களுக்கு உதவும்!” இயேசு: “நீங்கள் ஆசாரியர்களிடத்தில் போய் உங்களை காண்பியுங்கள்”. இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி அவர்களை அனுப்பினார். ஆசாரியர்கள் சபை ஆராதனைகளை வழி நடத்துபவர்கள். ஒரு மனிதன் சுகமாகிவிட்டான் என்பதை இவர்கள் தான் உறுதி செய்வார்கள். அந்தப் பத்துப் பேரும் உடனடியாக தங்கள் வழியே போனார்கள். அவர்கள் நடந்த சென்ற போது ஒரு காரியத்தை உணர்ந்தார்கள். தொழுநோயாளிகள்: “நாம் குணமாகி விட்டோம்! நம்முடைய தோல் மறுபடியும் ஆரோக்கியத்துடன் காணப்படுகிறது”. ஒரு மனிதன் திரும்பி, ஆண்டவராகிய இயேசுவிடம் ஓடி வந்தான். அவன் இயேசுவைக் கண்டு, அவர் முன்பாக முழங்கால் படியிட்டான். தொழுநோயாளி: “நன்றி! ஆண்டவரே. என்னை சுகப்படுத்தியதற்காக மிகுந்த நன்றி ஆண்டவரே!” இந்த மகிழ்ச்சியான மனிதனைப் பார்த்து இயேசு கேட்டார். இயேசு: “நான் பத்து பேரை குணமாக்க வில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? ஒரே ஒருவன் தான் எனக்கு நன்றி கூற திரும்பி வந்தானா?” ஆமாம்! ஒரே ஒருவன் தான்! அவன் நன்றி நிறைந்தவன். நீ எப்படி? இன்று நீ எதற்காக இயேசுவிற்கு நன்றி கூற முடியும்? மக்கள்: உரையாளர், இரண்டு தொழுநோயாளிகள், இயேசு. © Copyright: CEF Germany |